Contact : +91 94431 65504, 93451 09354, 90478 46962
பத்திரிகை, TV ஜோதிடர்
B.Sc.,M.A.,M.Phil., B.Ed,SMP

Visalakshi Jothida Manthralayam, Madappuram Vilakku,
Visalakshi Nagar, Thiruppuvanam - 630 611. (via) Madurai,
South India.

கடன் தீர்த்து செல்வவளம் தரும் மடப்புரம் விலக்கு விசாலாட்சி விநாயகர்!

விநாயக விரதங்களுள் சங்கடஹர சதுர்த்தி விரதம் தனி மகத்துவம் கொண்டது. ஒவ்வொரு மாதமும் பவுர்ணமியை அடுத்த நான்காம் நாள் தேய்பிறையில் வரும் சதுர்த்திநாளை சங்கடஹர சதுர்த்தி திருநாள் என்பர். சங்கடஹர சதுர்த்தி விசேஷமாக அனுசரிக்கப்படும் பிள்ளையாரை தரிசித்து நலம்பெறலாம். இப்படி சங்கடஹர சதுர்த்தி வழிபாடுகள் வெகுசிறப்பாக நடைபெறும் ஆலயங்களுள் சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் விலக்கில் அருள்பாலிக்கும் திசை மாறிய விசாலாட்சி விநாயகர் ஆலயம் குறிபிடத்தக்கதாகும். பொதுவாக திசை மாறிய தெய்வங்களுக்கு அருள் பாலிக்கும் திறன் அதிகம் என்பார்கள். கிழக்கு நோக்கியே எல்லா விநாயகர் திசை மாறி தெற்கு முகமாய் அருள் பாலித்து வருகிறார்.

விசாலாட்சி விநாயகர் எனும் பெயரோடு திகழும் இந்தப்பிள்ளையார் பெருமான் திருக்கோவிலுக்கு மதுரை பெரியார் நிலையத்தில் இருந்தும், மடப்புரம் காளியம்மன் கோவில் செல்லும் நகரப்பேருந்துகளில் சென்றால் மடப்புரம் விலக்கு தெற்கு முக விசாலாட்சி விநாயகர் கோவில் வாசலிலேயே இறங்கிக் கொள்ளலாம். இங்கு விசாலாட்சி ஜோதிட மந்திராலயமும் செயல்பட்டு வருகிறது. பார்க்க எளிமையாயினும் அருள் பொங்கும். அற்புத ஆலயமாக திகழ்கிறது. இந்த விசாலாட்சி விநாயகர் ஆலய கருவறையில் பாசம், அங்குசம், மோதகம், அபய முத்திரை தாங்கிய நான்கு திருக்கரங்களோடு, வலம் கழித்த துதிக்கையும் சேர்த்து ஐந்து கரத்தினராய் திகழும் இந்த விநாயகரை தரிசிக்கும் போதே நம் கவலைகள் நீங்கி பரவசம் ஏற்படுகிறது. பெயரிலும், அமைப்பிலும் மட்டுமல்லாது இந்தப்பிள்ளையாருக்கு செய்யும் பரிகார வழிபாடும் வித்தியாசமாகவே உள்ளது.

எல்லா விநாயகருக்கும் பூமாலை தான்சாற்றுவர் ஆனால் இக்கோவிலில் பக்தர்கள் 7 தேங்காய்களை மாலையாகக் கட்டி பெரிய 7 எலுமிச்சைப்பழம், 7 லட்டு வைத்து 108 மறைவலம் வந்து நேர்த்திக்கடன் செலுத்திகிறாகள். தேங்காய்க்கும் மூன்று கண்கள், பிள்ளையாருக்கும் சூரியன், சந்திரன், அக்னி என மூன்று கண்கள் உள்ளன. எனவே முக்கண்ணனான பிள்ளையாருக்கு தேங்காய்மாலை சாற்றுவது சிறப்பாகக் கருதப்படுகிறது. மேலும் இவர் வலம்புரி விநாயகராகவும் இருந்து, துதிக்கை சுழியானது ஓம் போல் உள்ளதால் இப்பிள்ளையாரை தரிசித்து முருகனை வணங்கிய பலனும் பெற்று, கடன் தொல்லை நீங்கி நலம் பெறலாம் என பக்தர்கள் சொல்கிறார்கள். துன்ப இருள் நீங்கி அருள் பெற விரும்பும் யாவரும் இந்தப் பிள்ளையாரை ஒரு முறை தரிசித்து சென்றால் பலன் கிடைக்கும். ஒருமுறை கோவில் தரிசன தொடர்புக்கு: கோவில் நிர்வாகி ஜோதிடர் கரு.கருப்பையா M.A., M.Phil., செல் : +91-9443165504.

விநாயகரை வழிபடும் இலைகளும், பலன்களும்

மருத இலை - மகப்பேறு
அரசு - எதிர்வாக்கு அடங்குதல்
அகத்தி இலை - துயரம் தீருதல்
அரளி - அன்பு பெருகுதல்
தாழை இலை - கோபம் நீங்குதல்
கண்டங்கத்தரி - லட்சுமி கடாட்சம்
துளசி - நல்வாழ்வு
மாதுளை இலை - நற்புகழ்
வில்வம் - இன்பம் பெருகுதல்
வன்னி இலை - முகத்தெளிவு
வெள்ளெருக்கு - செளபாக்யம்

சனி பிரதோஷத்தின் சிறப்பு

   நித்ய பிரதோஷம் பட்சப் பிரதோஷம், மாத பிரதோஷம், மஹா பிரதோஷம், ப்ரளய பிரதோஷம் என ஐந்து பிரதோஷங்களில் சனி பிரதோஷமே விசேஷமானது. பிரதோஷம் என்றால் அனைத்துக் குற்றங்களும், பாவங்களும் சிவபெருமானால் பொறுத்து மன்னிக்கக்கூடிய காலம் என்று பொருள். ஜாதகத்தில் ஏதாவது குறைகள் இருந்தால் திருமணத் தடை. புத்திரப்பேறின்மை கடன் போன்ற பல இன்னல்களுக்கு, பிரதோஷ விரதம் இருந்தால். சிவன் ஜாதக குறைகளைப் போக்கி நன்மை அளிப்பார்.

நாம், முற்பிறவிகளில் செய்த பாவங்களினால் எத்தனையோ துன்பங்களுக்கு ஆளாகின்றோம். பிரதோஷ விரதம், எல்லா துன்பங்களிலிருந்து நம்மைக் காக்கக் கூடியது. தினமும் மாலை சூரிய அஸ்தமனத்திற்கு முன் 24 நிமிடங்கள், பின் 24 நிமிடங்கள் ஆக 48 நிமிடங்கள் பிரதோஷ காலமாகும். இது நித்யப்பிரதோஷம்.

வளர்பிறை திரயோதசி திதி மாலைப் பொழுது பட்ச பிரதோஷமாகும். தேய்பிறைத் திரயோதசி திதி மாலைப் பொழுது மாத பிரதோஷமாகும். சனிக்கிழமையன்று தேய்பிறைத் திரயோதசி திதி கூடிவருவதுதான் 'மஹா பிரதோஷம்'. இதனை 'சனி மஹா பிரதோஷம்' என்று கூறுவோம்.

தேவர்கள் பாற்கடலைக் கடைந்துபொழுது ஏற்பட்ட விஷத்தை சிவபெருமான் தாமே உட்கொண்டு உலகைக் காப்பாற்றிய நாள். மற்ற பிரதோஷங்களில் உபவாசம்(சப்பிடாமல் இருப்பது) இருக்க முடியாதவர்கள், சனி பிரதோஷத்தன்று உபவாசம் இருந்து சிவபெருமானை வழிபட்டால், எல்லா பாவங்களும் நீக்கி, சகல நன்மைகளும் ஏற்படும் என்பது 'சனி மஹாபிரதோஷத்தின்' சிறப்பு.

 

நந்தியை வழிபட்டால் செல்வம் குவியும் என்று ஜோதிடர் கரு.கருப்பையா தகவல்

கரு.கருப்பையா திருப்புவனம் அருகே மடப்புரம் விலக்கு ஜோதிடர் கரு.கருப்பையா கூறியதாவது:-

பொதுவாக நந்தியெம் பெருமாள் வழிபாடு என்பது தொன்று தொட்டு இருந்து வருகிறது. ஏதாவது காரியத்தடங்கல் ஏற்படின், நந்தி மாதிரி குறுக்கேவராதே என்பார்கள். இதுவே தவறான பழமொழி. அனைத்து சிவாலங்களிலும் நந்தியை வழிபட்ட பிறகே சிவபெருமானை வழிபடுகிறோம்.

அதிலும் பிரதோஷ நாட்களில் நந்தியெம் பெருமானுக்கே பிரதான வழிபாடு நடக்கிறது. மாதந்தோறும் 2 பிரதோஷங்கள் வருகிறது. சனிப்பிரதோஷத்தில் விரதமிருந்து நந்தியெம் பெருமானையம், சிவ பெருமானையும் வழிபட்டால் ஒரு ஆண்டு முழுக்க வழிபட்டபலன் கிடைக்கும்.

செல்வம் பெருகும்

மாதந்தோறும் வருகின்ற பிரதோஷங்கள் தவிர தினமும் மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை யிலான காலத்தை நித்ய பிரதோஷ வேளையாக குறிப்பிட்டுள்ளனர். பிரதோஷ வேளையில் நந்தியை வழிபட்டால் செல்வவளம் பெருகும், மழை பெய்யும், இசைப்பிரியர்கள், நடிகர், நடிகையாக விரும்புகிறவர்கள், திரைத்துறையில் மின்ன விரும்புபவர்கள் நந்தியெம் பெருமானை வழிபட்டால் அந்தந்த துறைகளில் பிரகாசிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.

 

முடிசூட்டும் திருவெம்பாவை

சிவபெருமானின் புகழ்பாடுவது திருவெம்பாவையாகும். இது மாணிக்கவாசகர் திருவண்ணாமலையை துதிக்கும் போது பாடப்பெற்றதாகும்.

இருபது பாடல்களின் இறுதியிலும் என்பாவையாய் என்று வருவதால் இது திருவெம்பாவையாயிற்று. ஆதியும், அந்தமும் இல்லா அருட்பெருஞ்ஜோதி சிவலோகன் தில்லை சிற்றம்பலத்து ஈசர். ஆனந்தன், அமுதன் என்று பலவாறு சிவபெருமானின் புகழ் பாடப்பெற்றுள்ளது.

தாய்லாந்தில் மன்னர் முடிசூடிக் கொள்ளும்போது பாவைப் பாடல்கள் பாடப்படுகிறது.

Developed by Maduraisoft